IPL 2019 தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 20-வது லீக் ஆட்டம் அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.


பெங்களூரு அணி தரப்பில் துவக்க வீரர்களா களமிறங்கிய பார்த்திவ் படேல் 9(9) ரன்களில் வெளியேற, மறுமுனையில் அணித்தலைவர் விராட் கோலி நிதானமாக விளையாடி 41(33) ரன்கள் குவித்தார். எனினும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். மொயின் அலி 32(18) குவித்து அணிக்கு சற்று பலம் சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் ககிசோ ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.


இதனையடுத்து டெல்லி அணி தரப்பில் களமிறங்கிய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெல்லி அணி தரப்பில் அணி தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 67(50), பிரித்திவி ஷா 28(22) ரன்கள் குவித்தனர். ஆட்டத்தின் 18.5-வது பந்தில் டெல்லி அணி 152 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது.


இதன்மூலம் ராயல் சேலன்சர்ஸ் அணி விளையாடிய 6-வது போட்டியிலும் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் டெல்லி அணி 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு அணி தொடர்ந்து 0 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.