இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கார் மற்றும் டூவீலர்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ராஞ்சியில் இருக்கும் பண்ணை வீட்டில் தனக்கு பிடிக்கும் கார்கள் மற்றும் டூவீலர்களை வாங்கி நிறுத்துவதற்கென்றே மிகப்பெரிய ஷெட் ஒன்று போட்டு வைத்துள்ளார். அங்கு சென்று பார்த்தால், உலகம் முழுவதும் இருக்கும் மிகவும் பிரபலமான மற்றும் வித்தியாசமான கார்கள் மற்றும் டூவீலர்களை நீங்கள் பார்க்க முடியும். அதிவேகம் செல்லும் வாகனங்கள் முதல் கிளாசிக் வாகனங்கள் வரை தோனியின் ஷெட்டில் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில், 2000 ரோவர் மினி கூப்பர் ஸ்போர்ட் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 கார்களை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார். மிகவும் பழைய மற்றும் கிளாசிக் கார்களான இவை இரண்டையும் தோனி பொதுவெளியில் பயன்படுத்த தொடங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உடனே, அந்த கார்களில் அப்படி என்ன ஸ்பெஷல் என தேடத் தொடங்கிவிட்டனர். 


2000 ரோவர் மினி கூப்பர் ஸ்போர்ட்


கிளாசிக் கார்களில் ஒன்றான 2000 ரோவர் மினி கூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை தோனி அண்மையில் ராஞ்சியில் ஓட்டிச் சென்றிருக்கிறார். மினி ரோவரில் வந்த கடைசி கார் வேரியண்டுகளில் இதுவும் ஒன்று. பின்னர் மினி ரோவர் கார் நிறுவனம் பிஎம்டபள்யூ நிறுவனத்திடம் சென்றது. அப்போது முதல் பிராண்ட் மாறியது. தோனியிடம் இருக்கும் இந்த கிளாசிக் கார் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. வெள்ளை கோடுகளுடன் அலாய் வீலில் இருக்கிறது.  இந்த காரில் இருக்கும் அலாய் வீல் 12-இன்ச். 


காரின் எஞ்சின் அசல் யூனிட்டாக இருந்தால், அது 1.3-லிட்டர் BMC ஆஸ்டின் 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினிலிருந்து சக்தியைப் பெறும். இந்த எஞ்சின் 63 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். நான்கு வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்தி சக்கரங்களுக்கு மாற்றப்படுகிறது.



கிளாசிக் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 


தோனியிடம் இருக்கும் மற்றொரு கிளாசிக் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110. இது அவர் வைத்திருக்கும் சிறந்த விண்டேஜ் கார்களில் ஒன்றாகும். இந்த SUV ஆனது ரோவர் V8 கார்பூரேட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது தொழில்துறையின் சிறந்த இயந்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. V8 130 bhp ஆற்றலை வெளிப்படுத்தும்.


மேற்கூறிய கார்களைத் தவிர, மகேந்திர சிங் தோனியின் ஷெட்டில் போன்டியாக் ஃபயர்பேர்ட் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ போன்ற மாடல்களும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிக மிக அரிதான கார்கள் இவை. மேலும், ஒரு காலத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட நிசான் ஜோங்காவும் தோனியிடம் உள்ளது.



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ