2021 இந்தியன் பிரீமியர் லீக் (IPL)  போட்டித் தொடர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) தொடங்கியது. இந்த டி 20 லீக்கில் உலகின் அனைத்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் உரிமையாளர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்கள் சார்பாக விளையாடுவதற்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள். அதிலும் நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. 


ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் பிற நட்சத்திர வீரர்களுக்கு, அவர்கள் விளையாடிட்ய முதல் ஐபிஎல் போட்டியில் எத்தனை சம்பளம் வழங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? முதல் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களின் சம்பள விபரம்.


1. எம்.எஸ் தோனி (MS Dhoni):
2008 ஐ.பி.எல். போட்டிகளி சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அந்த சீசனில்  ரூ .6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 14 வது சீசனான தற்போதையை போட்டித் தொடருக்கு கிரிக்கெட் வீரர் தோனிக்கு ரூ .15 கோடி வழங்கப்பட்டுள்ளது. 


2. விராட் கோலி (Virat Kohli) :
ஆர்சிபி (Royal Challengers Bangalore) கேப்டன் விராட் கோலி 2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ( IPL)அணிக்காக ரூ.12 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, கோஹ்லி மிகவும் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் ஒருவர்.


3. ரோஹித் சர்மா (Rohit Sharma):
 ரோஹித் சர்மா 2011 ஆம் ஆண்டில்,  மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். அதற்கு முன், ரோஹித் 2008 ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் ஆணிக்காக விளையாடினார்.  2008 ஆம் ஆண்டில் அவர் பங்கேற்ற  முதல் போட்டிக்கு ரோஹித்திற்கு ரூ.3 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.


4. ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers):
ஐ.பி.எல் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் 100 கோடிக்கு மேல் வாங்கிய ஐந்து வீரர்களில் ஒருவர். 2008 ஆம் ஆண்டில், டெல்லி டேர்டெவில்ஸ், அணிக்காக விளையாடினார். ஐபிஎல் முதல் சீசனில் AB de Villiers மொத்தம் ரூ .1.2 கோடியை சம்பளமாக் பெற்றார்.


5. ஹார்டிக் பாண்ட்யா (Hardik Pandya):
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா, முதல் போட்டியில் ரூ .10 லட்சம் சம்பளத்தில் அணியில் சேர்ந்தார். பாண்ட்யா தற்போது ரூ .11 கோடி. சம்பாதிக்கிறார்


ALSO READ | IPL 2021, CSK vs DC: தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி வாகை சூடியது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR