கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் இரண்டாவது பிரேத பரிசோதனையில், அவர் இறக்கும் போது அவரது உடலில் மதுபானமோ அல்லது போதை மருந்துகளின் தடயங்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது. மூளை அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள மருத்துவமனையில் இருந்து வெளிவந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 25 அன்று மரடோனா தனது 60 வயதில் இறந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மராடோனா தனது சிறுநீரகங்கள், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக சான் ஐசிட்ரோ பொது வழக்கறிஞர் புதன்கிழமை வெளியிட்ட பிரேத பரிசோதனையின் முடிவுகள் தெரிவித்தன.


இந்த மாத தொடக்கத்தில், டியாகோ மரடோனா (Diego Maradona) உறக்கத்திலேயே இறந்துவிட்டதாக ஒரு ஆரம்ப பிரேத பரிசோதனையில் தீர்மானிக்கப்பட்டது. 'கடுமையான நுரையீரல் வீக்கத்தின் இரண்டாம் நிலை காரணமாக இருதய செயலிழப்பு நீடித்த கார்டியோமயோபதியுடன் அதிகரித்திருக்கிறது' என்று மரணத்திற்கு காரணம் கூறப்பட்டது. இதய செயலிழப்பு காரணமாக, நுரையீரலில் திரவங்கள் சேர்ந்து கொண்டு அடைப்பு எற்படுகிறது.


இருப்பினும், சமீபத்திய அறிக்கைகளின்படி, அர்ஜென்டினா (Argentina) சூப்பர் ஸ்டார் ஆல்கஹால் அல்லது எந்தவொரு சட்டவிரோத போதைப் பொருளையும் உட்கொண்டதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக, கவலை மற்றும் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சைக்கோட்ரோபிக் மருந்துகளே காணப்பட்டுள்ளன.


 இதயம் மற்றும் நுரையீரலைத் தவிர, மரடோனாவின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் சேதமடைந்திருந்தன என்பதையும் பிரேதப் பரிசோதனை அறிக்கை சுட்டிக்காட்டியது.


ALSO READ: Football: கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்


நவம்பர் 3 ம் தேதி அவரது மூளை அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, மரடோனாவின் தனிப்பட்ட மருத்துவர் லியோபோல்டோ லூக், “மரடோனாவுக்கு மேலும் சில சிகிச்சைகள் தேவைப்ப்படுகின்றன” என்று தெரிவித்தார். ஆனால், அவர் உடல்நிலையைப் பற்றிய மற்ற விவரங்களை அவர் அளிக்கவில்லை. ஆனால் மரடோனா முன்பு போதை மருந்துகள் (Drugs) மற்றும் குடிப்பழக்கத்துடன் போராடிக்கொண்டிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.


மரடோனாவின் மகள்களில் ஒருவரான கியானின்னா மரடோனா, பிரேத பரிசோதனை முடிவு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தார். இறப்பதற்கு சில வாரங்களுக்களுக்கு முன்னர் தனது தந்தை இயல்பாக இல்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.


அவர் ட்விட்டரில், “என் தந்தையின் பிரேத பரிசோதனையில் போதை மருந்துகள், மரிஜுவானா மற்றும் ஆல்கஹால் பற்றி தெரியப்படும் என பலர் காத்திருந்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. நான் ஒரு மருத்துவர் அல்ல. ஆனால் அவர் உடல் மிகவும் வீங்கி இருந்தது என்பதை என்னால் அறிய முடிந்தது. நான் கேட்ட குரல் அவர் குரலை ஒத்த ஒரு ரோபோ குரல். அது அவர் குரல் அல்ல” என்று எழுதியுள்ளார். 


மரடோனாவின் மகள் தனது ட்வீட் மூலம் மறைமுகமாக ஏதோ சொல்ல வருகிறார் என்பது இதிலிருந்து புரிகிறது. அவர் தரப்பு கருத்தை கேட்பதில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.


ALSO READ: footballer மரடோனாவுக்கு பதிலாக பாப் பாடகி மடோனாவுக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR