MS Dhoni Captaincy: 2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாகும். எப்படி 1983ஆம் ஆண்டை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருந்து பிரிக்க இயலாதோ அதேபோல், 2007ஆம் ஆண்டையும் இந்தியாவால் மறக்கவே முடியாது. 50 ஓவர் உலகக்கோப்பையில் மண்ணைக்கவ்வி பெருத்த சுமை இந்திய அணியின் மீது இருந்த அதே ஆண்டில், டி20 உலக்கோப்பையை தூக்கி அனைத்து பாரத்தையும் தோனி என்ற ஒற்றை மனிதர் இறக்கிவைத்தார் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிராவிட்டுக்கு பின்...


2007ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று ராகுல் டிராவிட் இந்தியாவின் அனைத்து வகை கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்தபோது, டி20 உலகக் கோப்பையின் முதல் பதிப்பின் குரூப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோனி இந்தியாவை வழிநடத்தினார். 


அந்த தொடரில் ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியின் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானதே, இந்திய கேப்டனாக தோனியின் முதல் போட்டியாகும். இந்த தொடருக்கு சில மாதங்களுக்கு முன்பு மேற்கு இந்திய தீவுகளில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் குரூப் ஸ்டேஜிலேயே இந்தியா வெளியேறிய பின்னர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, டி20 டிராவிட் உலகக் கோப்பையின் தொடரில் இருந்து விலகினார். 


மேலும் படிக்க | Ashes 2023: Bazball முறை ஊத்திக்கிச்சா... தோல்விக்கு பின் பென் ஸ்டோக்ஸ் சொன்னது இதுதான்!


டிராவிட்டின் கேப்டன்ஸி வீழ்ச்சி


ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக விளையாடி வந்தது. அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-0 என்ற கணக்கில் பதிவு செய்திருந்தனர். இருந்தபோதிலும், 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக டிராவிட்டின் நாட்கள் எண்ணப்பட்டன என்று தான் கூறவேண்டும்.


டிராவிட் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக முடிவு செய்த பின், சச்சின், கங்குலி ஆகியோரும் அதிலிருந்து விலக முடிவெடுத்தனர். அப்போது, டி 20 உலகக்கோப்பை பெரிய பெயரை பெறவில்லை என்பது தெளிவாக இருந்தது. எனவே, ஜாம்பவான்களின் புகழ் மற்றும் மரியாதையின் பொருட்டு, தோனி தலைமையில் இளம் அணியை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப அணி தேர்வாளர்கள் முடிவு செய்தனர்.


சச்சினின் பரிந்துரை


தோனியின் இளம்படை போட்டியின் நடுவில் இருந்தபோது, டிராவிட் ஒட்டுமொத்தமாக கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்த பிறகு இந்திய அணியில் மீண்டும் ஒரு புதிய நெருக்கடி உருவானது. அவர் தனது முடிவை அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவாருக்குத் தெரியப்படுத்தினார். பின்னர், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு சரத் பவார் சச்சினிடம் கோரிக்கை விடுத்தார். சச்சின் அதனை உளமார மறுத்து, தோனியின் பெயரைப் பரிந்துரைத்ததாக பொதுவாக கூறப்படுகிறது.


ஒயிட் பால் கேப்டன்


முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு, டிராவிட்டின் பின் யார் கேப்டன் என்பதை அவசர அவசரமாக அறிவிக்கவில்லை. மேலும் டி20 உலகக் கோப்பையில் தோனி இந்தியாவை வழிநடத்துவதைப் பார்த்தது, குறைந்தபட்சம் ஒருநாள் போட்டிக்காவது அவரை தேர்வு செய்யலாம் என காத்திருந்தனர். இருப்பினும், தோனி, டி20 உலகக் கோப்பையில் அணியை வழிநடத்தும் முன்னரே, இந்தியாவின் ஒயிட்-பால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்ளூர் தொடருக்காக கிளம்பினார் எனலாம்.  


ஏன் தோனி...?


சச்சின் டெண்டுல்கரின் பரிந்துரைகள் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தோனியின் வெற்றியைத் தவிர (டி20 உலகக் கோப்பை வெற்றி), அவரை வெள்ளை பந்து கேப்டனாக நிரந்தரமாக நியமிக்க தேர்வுக் குழுவைத் தூண்டியது அவர் கொண்டிருந்த தலைமைப் பண்புகள் தான் என்று வெங்சர்க்கார் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 


அதில் அவர், "அணியில் ஒரு தானியங்கி தேர்வாக இருப்பதைத் தவிர, கிரிக்கெட் குறித்த புத்திசாலித்தனம், உடல் மொழி, அணியை முன்னணியில் இருந்து வழிநடத்தும் திறன் மற்றும் மனிதவள நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாங்கள் பார்த்தோம். தோனியின் ஆட்டத்தை அணுகும் விதம், உடல் மொழி, மற்றவர்களிடம் எப்படிப் பேசினார் என்பதை பார்த்தோம்; எங்களுக்கு நேர்மறையான கருத்து கிடைத்தது" என்றார். 


இதன்பின், அனைத்தும் உங்களுக்கு தெரிந்ததுதான். தோனி தலைமையில் தான் இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்தது, 1983க்கு பிறகு 2011ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது, 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வழங்கியது. அவரின் செயல்பாடு இந்திய அணியில் தற்போது வரை நீடிக்கிறது எனலாம். அவர் 2020ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் தான் விளையாடி வருகிறார்.


மேலும் படிக்க | விராட் கோலி ஒரு போஸ்ட் போட்டா இத்தனை கோடிகளா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ