ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடந்துவருகிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனையடுத்து இந்தியா ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. அதில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 192 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 13 ஓவர்களில் 94 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. சூர்யகுமார் யாதவின் அதிரடியால் அடுத்த 7 ஓவர்களில் இந்திய அணி 98 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமாரின் இந்த அதிரடி ஆட்டத்தை அடுத்து பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துவருகின்றனர்.


 



இந்தச் சூழலில் சூர்ய குமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளார் ஒருவர், டி20 உலகக் கோப்பைக்கு முன்னர், சோதனை முயற்சியாக கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் நீங்கள் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவீர்களா? என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அப்போது குறுக்கிட்ட சூர்யகுமார் யாதவ், ‘அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? என சிரித்துக்கொண்டே எதிர்கேள்வி கேட்டார். 


மேலும் படிக்க | அடுத்த தோனி ஹர்திக் பாண்டியாதான் - ஹர்பஜன் சிங் ஆரூடம்


அதனைத் தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ், “கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து திரும்பி வந்துள்ளார். அவருக்கு சிறுது அவகாசம் தேவை. நான் முன்பே சொன்னதுபோல் அணியின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்திலும் நான் பேட்டிங் ஆடுவேன். இதை கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். நான் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என அவர்கள் கூறுவார்கள். நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம். 



அத்திட்டங்களை பயிற்சியின்போது நடைமுறைப்படுத்துவதை விட போட்டியில் நடைமுறைப்படுத்தினால் அது எங்களுக்கு இன்னும் நிறைய யோசனைகளைத் தரும்” என்றார்.


மேலும் படிக்க | ஆசிய கோப்பை கிரிக்கெட் - வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை


முன்னதாக, ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காத கே.எல்.ராகுல் மீது பலரும் கடுமையான விமர்ச்னங்களை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ