புதுடெல்லி: கிரிக்கெட் என்றாலே முதலில் மனதில் தோன்றுவது, பந்து, கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப் மற்றும் பந்து வீசும் பெளலரின் முகம் தான். ஒரு பேட்டர் எடுக்கும் ரன்களும் பவுலர் எடுக்கும் விக்கெட்டுகளும் தான் என்றும் மனதில் நிற்பவை. சதம் அடிப்பதும், ஹாட்ரிக் எடுப்பதும் கிரிக்கெட் விளையாட்டில் சுவாரசியமான விஷயங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் கிரிக்கெட்டில், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் கிடைக்கும் ஹாட்ரிக் சாதனை பட்டியலில் வீரர்களினி எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கும். அதிலும், ஹாட்ரிக் அடித்த பிறகும், தொடர்ந்து அடுத்த பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் அரிதான சாதனையாகும்.


பந்து வீச்சாளர் நான்கு பந்துகளில் இரண்டு செட் விக்கெட்டுகளை எடுத்ததால் இந்த சாதனை பெரும்பாலும் "டபுள் ஹாட்ரிக்" என்று அழைக்கப்படுகிறது. தங்களுடைய கேரியரில் 'டபுள் ஹாட்ரிக்' எடுத்த  பந்துவீச்சாளர்கள் மிகவும் குறைவானவர்கள் தான் உள்ளனர். அரிய இந்த டபுள் ஹாட்ரிக் லிஸ்டில் முதலில் இடம் பெறுவது லசித் மலிங்கா.


மேலும் படிக்க | உன் நல்லதுக்கு தான் கோபப்பட்டேன் இஷான்! டோண்ட் வொர்ரி! விளக்கமளிக்கும் ரோஹித் ஷர்மா


டபுள் ஹாட்ரிக் லசித் மலிங்கா
டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட், டி 20 என கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் எதிரணியினரை கதி கலங்க வைத்த பெளலர்களின் பட்டியலிலும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா முக்கியமானவர். அவரின் பவுலிங் திறனை யாராலும் மறக்க முடியாது.


2007 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கையின் சூப்பர் எட்டு ஆட்டத்தில். ஷான் பொல்லாக், ஆண்ட்ரூ ஹால், ஜாக் காலிஸ் மற்றும் மக்காயா என்டினி ஆகியோர். மலிங்காவின் தொடர்ச்சியான நான்கு பந்துகளில் அவுட்டானார்கள்.


ஆண்ட்ரே ரஸ்ஸல்
திறமையான ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், இந்தியா ஏ அணிக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்காக இரட்டை ஹாட்ரிக் எடுத்தார். டபுள் ஹாட்ரிக்கை ஆண்ட்ரேவுக்கு கொடுத்து, அவுட்டான இந்திய கிரிக்கெட்டர்கள், யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், நமன் ஓஜா மற்றும் யூசுப் பதான் ஆவார்கள்.


அல்-அமிம் ஹொசைன்


யுசிபி-பிசிபி லெவனுக்கான அபாஹானி லிமிடெட் அணிக்கு எதிரான லிஸ்ட் ஏ டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் உள்ள மற்றொரு பந்துவீச்சாளர் ஹொசைன்.


மேலும் படிக்க | ’எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்க’ ரோகித் சர்மா


கேரி புட்சர்


இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்க் புட்சரின் சகோதரர் கேரி, டெர்பிஷயர் அணிக்கு எதிராக சர்ரே அணிக்காக தனது இரட்டை ஹாட்ரிக் விக்கெட்டுகளை தனது அற்புதமான பந்துவீச்சில் எடுத்தார்.


கெவன் ஜேம்ஸ்


1996 ஆம் ஆண்டு ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரின் விக்கெட்டை கெவன் ஜேம்ஸ் வெளியேற்றினார்.


அல்போன்சோ தாமஸ்


2014 கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சசெக்ஸுக்கு எதிராக சோமர்செட்டிற்கான 4 பந்துகளில்  4 விக்கெட்டுகளை எடுத்தார் அல்போன்சோ தாமஸ். 


மேலும் படிக்க | பந்துவீசவில்லை... செங்கல்லை வீசுகிறார் - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் குறித்து கோலி சொன்னது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ