வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கீரியும் பாம்பும் சண்டை போட்டுக் கொள்வது போல பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடக்கிறது. புதன்கிழமை நடந்த இவ்விரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டியிலும், மூன்றாவது நடுவரின் டிஆர்எஸ் முடிவால் ஆட்டம் களேபரமானது. இலங்கை அணி இப்போது வங்கதேசம் சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது 20 ஓவர் போட்டி சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுக்க, கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது பேட்டிங் ஆடியது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் வங்கதேச வீரர்கள் சவுமியா சர்க்கார், லின்டன் தாஸ் ஓப்பனிங் இறங்கினர். மூன்றாவது ஓவரில் வங்கதேச வீரர் சவுமியா சர்க்கார் பேட்டிங் ஆடும்போது, பந்து பேட்டில் பட்டு எட்ஜாகி கீப்பரிடம் கேட்சானது. கள நடுவர் அவுட் கொடுத்த நிலையில், திடீரென ரிவ்யூ எடுத்தார் சவுமியா சர்க்கார். அதில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தபோதும், மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என அறிவிக்க, பவுண்டரி எல்லை வர சென்றுவிட்ட சவுமியா சர்க்கார் மீண்டும் பேட்டிங் ஆட வந்தார்.


மேலும் படிக்க | தாத்தா, பேரன் என இரட்டை வேடத்தில் நடித்து அசதியுள்ள தோனி!


இது இலங்கை அணி வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களால் மூன்றாவது நடுவரின் முடிவை ஜீரணிக்கவே முடியவில்லை. பெரிய ஸ்கிரீனில் பந்து பேட்டில் பட்டு கிளியராக எட்ஜ்ஜானது தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர், எட்ஜ் இருப்பது தெரிந்தாலும் அது பேட்டில் பட்டதை உறுதிபடுத்த முடியவில்லை என கூறி கள நடுவர் அவுட் கொடுத்ததை வாபஸ் பெறுமாறு கூறினார். இதனால், அவுட் என நினைத்து வெளியே சென்ற சவுமியா சர்க்கா மீண்டும் களத்துக்கு வந்து விளையாடினார்.


இலங்கை அணி வீரர்கள் எவ்வளவோ கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தபோதும், அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. பின்னர் தொடர்ந்து ஆடுமாறு கள நடுவர்கள் எச்சரிக்க, இலங்கை அணி வீரர்கள் வேண்டா வெறுப்பாக அப்போட்டியில் மேற்கொண்டு விளையாடினர். முடிவில் வங்கதேச அணி 18.1 ஓவரில் 2 விகெட்டுகளை மட்டுமே இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என சமன் செய்தது. வங்கதேச அணியில் சவுமியா சர்க்கார் 26 ரன்களும், லின்டன் தாஸ் 36 ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் வந்து அதிரடியாக ஆடிய 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.


மேலும் படிக்க | IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் டி20 உலக கோப்பை டிக்கெட் விலை ரூ.1.86 கோடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ