பழி தீர்த்தது இங்கிலாந்து அணி! இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சீரிஸில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது இந்திய அணி. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து பவுலர்கள் இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து எடுத்தனர். இதனால் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் களமிரங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் 50 திற்க்கும் அதிகமான ரன்களை அடித்தனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.
ALSO READ கிரீசுக்கு வெளியே நிற்கக்கூடாது: நடுவரின் முடிவால் சர்ச்சை!
354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேஎல் ராகுல் 8 ரன்களில் வெளியேற இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணி தடுமாறியது. பின்பு ரோகித் சர்மா - புஜாரா கூட்டணி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 59 ரன்களில் வெளியேற மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இன்னிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக 76 ரன்கள் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற நிலையில் இந்த சீரிஸ் உள்ளது.
ALSO READ 19 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸ் மைதானத்தில் ஆடப்போகும் இந்திய அணி!
2002 ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடிய போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்திய அணி. அதற்கு பழி தீர்க்கும் விதமாக இன்றைய போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQY