16:47 12-07-2018
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது!




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காம் நகரில் இன்று நடைப்பெறுகிறது!


விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.


முன்னதாக டி20 போட்டிகள் நடைப்பெற்று, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடர் இன்று முதல் துவங்குகிறது.


இத்தொடரில் இந்தியா வெல்லும் பட்சத்தில் ICC தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ICC ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில் முதலிடத்தை பெறும். அதே வேலையில் இங்கிலாந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் போதுமானதாக உள்ளது.


கடந்த சில போட்டிகளாக ரன் மழை குவித்து வெற்றிகளை பெற்று வரும் இங்கிலாந்து அணி வீரர்கள் இந்தியாவிற்கு பெரும் சவாலாய் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் இங்கிலாந்து வீரர்களை சமாளிக்க இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தயாராக உள்ளனர். இரு அணிகளில் எந்த அணிக்கு மகுடம் கிடைக்கும் என்பது இந்த தொடரில் தெரிந்து விடும்.


ஒருநாள் தரவரிசை முதலிடம் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் முன்னாள் அணி தலைவர் டோனி, தனது ஒருநாள் போட்டிகளின் பாதையில் 10000 ரன்கள் என்னும் மைல்கல்லை எட்டவுள்ளார். ஒருநாள் தொடர்களில் இதுவரை 318 போட்டிகளில் விளையாடியுள்ள டோனி, 9967 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 33 ரன்கள் குவித்தால் 10000 ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 12-வது இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது!