IndvsEng: டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவை பழிதீர்த்துக் கொண்டது.
நாளை முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 1ம் தேதி) பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியை பொருத்த வரை இந்திய அணிக்கு பெரும் சவால்கள் காத்திருகின்றன. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து அணி 5_வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் ரெடியாக உள்ளனர். இந்த மைதானத்தை பொருத்த வரை இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. ஆறு போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் டிராவும், ஐந்து போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் விராத் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைக்குமா? என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
இங்கிலாந்தில் 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக முன்னால் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரை இழந்தது. அப்பொழுது அந்த அணியில் விராத் கோலியும் இருந்தார். இப்பொழுது இவர் தலைமையிலான அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று அசத்துமா என்பது இந்திய வீரர்கள் ஆடும் திறமையை பெருத்தே உள்ளது.
தற்போது போட்டி துவங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்துள்ளது!