யூரோ கோப்பை :பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஐஸ்லாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடியது பிரான்ஸ் அணி. முதல் பாதியில் அடுத்தடுத்து கோல்கள் அடித்ததால் ஆட்டத்தின் போக்கை தன் வசம் படுத்தியது.
12-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் கிராட். அதுதான் கோல் மழையின் தொடக்கமாக இருந்தது. ஆட்டத்தின் 19-வது, 42-வது, 45-வது நிமிடங்கள் மேலும் கோல்கள் அடித்து, பிரான்ஸ் அணி முதல் பாதியின் முடிவில் 4-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஐஸ்லாந்து, ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. அதன் பலனாக, 56-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அடுத்தச் சில நிமிடங்கள் பிரான்ஸ் வீரர் இன்னொரு கோல் அடித்தார் கிராட். இதனால் பிரான்ஸ் அணி 5-1 என வலுவான நிலை அடைந்தது. ஆட்டத்தின் இறுதியில் இன்னொரு கோல் அடித்தது ஐஸ்லாந்து. இறுதியில் 5-2 என்கிற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை அடைந்தது பிரான்ஸ்.
வரும் 7-ம் தேதி மார்சீலியில் நடைபெறும் அரையிறுதியில் ஜெர்மனியைச் சந்திக்கிறது பிரான்ஸ்.