முன்னாள் இந்திய அணி வீரர்களாக இருந்த தமிழக கிரிக்கெட் வீரர்களான முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் மீது ரசிகர்களின் அன்பு குறையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தினேஷ் கார்த்திக் நேற்று மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு புறப்பட்டார்.  தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2022-ல் முரளி விஜய் விளையாடி வருகிறார்.  டிஎன்பிஎல் 2022-ல் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விஜய், டி20 லீக்கில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிராக ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக விஜய் 66 பந்துகளில் 121 ரன்களுடன் 12 சிக்ஸர்களை விளாசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய தங்க நாயகன் நீரஜ் சோப்ரா


இருப்பினும், சமீபத்திய TNPL 2022 போட்டியின் போது, ​​​​முரளி விஜய் முன்பு ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரைக் கோஷமிடத் தொடங்கியதால், அவர் ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு சங்கடமாக இருந்தது. கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா வஞ்சாரா முரளி விஜய்யுடன் உறவு வைத்திருந்ததாகக் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது.  பின்னர், தினேஷ் கார்த்திக் நிகிதாவிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் நிகிதா விஜய்யை திருமணம் செய்து கொண்டார், மேலும் கார்த்திக் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார். 


 



முரளி விஜய்யின் முன் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரை ‘டிகே, டிகே’ என்று உச்சரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்கில் வைரல் ஆகி வருகிறது.  விஜய் இந்த ஆண்டு TNPL போட்டிகளில் 224 ரன்கள் குவித்துள்ளார். 38 வயதான அவர் 172.3 ஸ்ட்ரைக் ரேட்டுடன் லீக்கில் ஐந்தாவது அதிக ரன் எடுத்தவர் ஆவார்.
"நான் முடிந்தவரை விளையாட விரும்புகிறேன். ஒரு தனிப்பட்ட இடைவெளி எடுத்தேன், எனக்கு ஒரு இளம் குடும்பம் உள்ளது, அவர்களை கவனித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் இப்போது எனது கிரிக்கெட்டை அனுபவித்து வருகிறேன், நான் உடல்தகுதியுடன் இருக்கிறேன், என் அணிக்காகவும் TNPLக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்,” என்று TNPL 2022க்கு முன்னதாக விஜய் கூறி இருந்தார்.  


மேலும் படிக்க | ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ