ஃபிஃபா யு-17 உலக கோப்பை: பைனலில் இங்கிலாந்து - ஸ்பெயின் மோதல்
இந்தியாவில் முதல் முறையாக் 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இறுதி கட்டத்தை எட்டி உள்ள யூ-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியைப் பார்க்க ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு கோப்பை வழங்க இருக்கிறார் இவர்.
இந்த போட்டி சோனி லைவ் ஆப் (SonyLIV App) மற்றும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த போட்டியை சோனி டென் 2 (SONY TEN 2), சோனி டென் 2 எச்டி (SONY TEN 2 HD), சோனி ஈஎஸ்பிஎன் (SONY ESPN) & சோனி ஈஎஸ்பிஎன் எச்டி (SONY ESPN HD) போன்றவை சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.