உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி,  பெல்ஜியவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. 


இந்த போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் 3வது லீக் ஆட்டத்தில் 'ஜி' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் மோதின. இதில், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை, வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி பெற்றுள்ளது. 


இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணியும்  கோல் போட முயற்சித்தன. இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்தது. இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.


தோற்ற போதும் 2வது இடம் பிடித்த இங்கிலாந்து 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்றது. பெல்ஜியம் அணியின் அட்னன் ஜனுஜாஜ் வெற்றிக்கான கோலை அடித்தார்.