ஃபிபா உலக்கோப்பை கால்பந்து: காலிறுதி ஆட்டங்கள் யார் யாருடன் மோதல்
நாளை மறுநாள் உலக்கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஆரம்பம்.
21-வது FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது.
32 நாடுகள் பங்குபெற்ற உலக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் ஆட்டங்கள் முடிவடைந்த, நாளை மறுநாள் முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
21-வது FIFA உலக்கோப்பை கால்பந்து தொடரில் 8 பிரிவுகள் என, ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு நாடுகள் என்று மொத்தம் 32 நாடுகள் பங்குபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. நாக் அவுட் சுற்றில் 16 அணிகள் மோதின. அதில் வெற்றி பெற்ற 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
லீக் மற்றும் நாக் அவுட் ஆட்டங்களில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றன. ஆம், கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகல், ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகள் வெளியேறின.
ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிக்களில் நடைபெற உள்ள காலிறுதி ஆட்டங்களில் பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம், உருகுவே, ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து முன்னேறி உள்ளன. இதில் வெற்றி பெரும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
காலிறுதி ஆட்டம் முழுவிவரம்:
6 ஆம் தேதி நடைபெறும் முதல் காலிறுதியில் இரவு 7.30 மணிக்கு உருகுவே - பிரான்ஸ் அணிகளும், இரவு 11.30 மணிக்கு பிரேசில் - பெல்ஜியம் அணிகளும் மோதுகின்றன.
7 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் காலிறுதியில் இரவு 7.30 மணிக்கு ஸ்வீடன் - இங்கிலாந்து அணிகளும், இரவு 11.30 மணிக்கு ரஷ்யா - குரேஷியா அணிகளும் மோதுகின்றன.