உலகக்கோப்பையில் அசத்தும் ஆசிய அணிகள்! உலக இதயங்களை வென்ற ஜப்பான் ரசிகர்கள்
FIFA WC 2022: உலகக்கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி உடனான ஜப்பான் அணியின் வெற்றிக்குப் பிறகு, மைதானத்தைச் சுத்தம் செய்துவிட்டுச் சென்ற ஜப்பான் ரசிகர்கள் -வீடியோ
FIFA WC 2022: உலகக்கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி உடனான ஜப்பான் அணியின் வெற்றிக்குப் பிறகு, மைதானத்தைச் சுத்தம் செய்துவிட்டுச் சென்ற ஜப்பான் ரசிகர்கள் -வீடியோ
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடரில் நான்கு நாட்களில் நடந்த போட்டியில் உலகக்கோப்பையை வெல்லும் எனக் கணிக்கப்பட்ட இரண்டு பெரிய அணிகள் தோல்விகளை சந்தித்துள்ளது. அதேநேரத்தில் நினைத்து பார்க்க முடியாத இரண்டு பெரிய வெற்றி பெற்று சிறப்பான சம்பவம் செய்திருக்கிறது ஆசிய அணிகள். முதலில் சவுதி அரேபியா அர்ஜென்டினாவை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை படைத்தது. உலகக் கோப்பையில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜப்பான், முதல் பாதியில் 0-1 என பின்தங்கி இருந்தது. அதன்பிறகு ஜப்பான் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை தன்வசம் ஆக்கியது.
இப்போட்டியில் முதலில் ஜப்பான் வீரர்கள் தங்கள் ஆட்டத்தால் அனைவரின் மனதையும் கவர்ந்தனர். பிறகு ஜப்பான் ரசிகர்கள் தங்களது குணத்தால் உலகம் முழுவதையும் கிறங்கடித்துள்ளனர். தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் அவர்கள் குறித்து தான் பேச்சு. ஜெர்மனி மற்றும் ஜப்பான் போட்டி முடிந்ததும், ரசிகர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். ஆனால் ஜப்பானிய ரசிகர்கள் அங்கேயே இருந்தனர். அவர்கள் நீல நிற குப்பைப் பைகளை எடுத்துக்கொண்டு, மைதானத்தில் இருந்த வெற்று தண்ணீர் பாட்டில்கள், வீசப்பட்ட உணவு மற்றும் பிற குப்பைகளை பைகில் சேகரிக்கத் தொடங்கினர். சில நிமிடங்களில் முழு மைதானமும் மீண்டும் ஜொலித்தது மற்றும் புதிய போட்டியை நடத்த தயாராக இருந்தது.
அதே நேரத்தில், ஜப்பான் வீரர்களும் தங்கள் ஆடை அறையை முழுமையாக சுத்தம் செய்தனர். இதுக்குறித்து ஃபிஃபா தனது ட்விட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஜப்பான் வீரர்கள் தங்கள் ஆடை அறையை முற்றிலும் சுத்தம் செய்துவிட்டுச் விட்டுச் சென்றதாகக் கூறியுள்ளது.
மேலும் படிக்க: ரசிகர் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோ... 2 போட்டிகளில் விளையாட தடை!
ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜப்பானின் ரசிகர்களும், அந்நாட்டின் கலாச்சாரமும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்துவதன் மூலம், கத்தார் தனது கலாச்சாரத்தையும், மதத்தையும் உலகுக்குக் காட்டவும், தனக்கென ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் ஜப்பான் ரசிகர்கள் சில நிமிடங்கள் தங்கள் கலாச்சாரத்தின் தோற்றத்தை உலகம் முழுவதும் காட்டினர்.
மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றிய ஜப்பான் ரசிகர்களை நோக்கி, "நீங்கள் இதை கேமராவிற்காக செய்கிறீர்களா" என்று கத்தார் நாட்டவர் கேட்டதற்கு, "நாங்கள் ஒருபோதும் குப்பைகளை அப்படியே போட்டுவிட்டு செல்ல மாட்டோம். எந்த இடமாகினும் அதை நாங்கள் மதிக்கிறோம்" என்று கூறினார்.
கத்தாரில் கால்பந்து போட்டி காண வந்த ஜப்பானிய ரசிகர்கள் ஆட்டம் முடிந்ததும் குப்பைகளை சுத்தம் செய்து உலகுக்கு நல்ல செய்தியை சொல்லி உள்ளனர். இனி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் அனைத்து நாட்டு ரசிகர்களும் சுத்தம் செய்வார்களா? என்று பார்ப்போம்.
மேலும் படிக்க: FIFA Worldcup 2022: கத்தாரில் இதையெல்லாம் செய்தால் சிறை தண்டனையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ