தென் கொரியா தலைநகர் சியோலில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறினார். இறுதி போட்டியில் உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வேற்ற நசோமியை எதிர்கொண்டார். இன்று நடைபெற்ற பைனலில் 22-20, 11-21, 21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வெற்றி மூலம் கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சிந்து. மேலும் பேட்மின்ட்டன் தரவரிசையில் நான்காவது இடத்தை சிந்து பிடித்தார்.


உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஜப்பானின் நசோமியிடம் போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.