கிரிக்கெட் இனி மெல்ல சாகும் - கபில் தேவ் எச்சரிக்கை
தேசங்களுக்கு இடையிலான கிரிக்கெட் இனி மெல்ல சாகும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் எச்சரித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு உலகம் முழுவதும் மவுசு இருக்கிறது. ஐபிஎல்லில் விளையாண்டால் பணம், புகழ் இரண்டுமே கிடைப்பதால் பல தேச கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் ஐபிஎல்லில் கலந்துகொண்டுள்ளன. அதேசமயம், ஐபிஎல் போன்றவற்றால் டெஸ்ட், ஒருநாள் ஆகிய கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்து நேரலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐபிஎல்லை உற்சாகப்படுத்த உற்சாகப்படுத்த எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நாடு என்ற உணர்வில் கிரிக்கெட் விளையாடாமல் பணத்தை மையமாக வைத்து விளையாட ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு கபில் தேவ் பேட்டி அளித்தார். அதில், “உலக கிரிக்கெட் வணிக மயமாகி தனியார் கிரிக்கெட்டின் ஆக்கிரமிப்பு ஊடுருவத் தொடங்கி இப்போது வியாபிக்கவும் தொடங்கியுள்ளது. இப்படியே போனால் கால்பந்தில் எப்படி கிளப் கால்பந்து ஆதிக்கம் பெருகி சர்வதேச கால்பந்து நாடுகளுக்கு இடையே நடைபெறாமல் வெறும் உலகக்கோப்பையில் மட்டும் நடக்கிறதோ அதே நிலைதான் கிரிக்கெட்டிலும் உருவாகும்.
தனியார் கிரிக்கெட் ஆக்கிரமித்தால் டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் காலியாகிவிடும். ஐசிசி இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், தங்களுக்கும் பணம் வருகிறது என்று இதை கண்டுகொள்ளாமல்விட்டால் தேசங்களுக்கு இடையிலான கிரிக்கெட் மெல்ல சாகும்.
இது சர்வதேச கிரிக்கெட்டை அழித்துவருவதாக நான் நினைக்கிறேன். இந்த விளையாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் ஐசிசிக்கு பெரிய பொறுப்புள்ளது. தற்போதைய கிரிக்கெட் வளர்ச்சி ஐரோப்பாவில் நிலவும் கால்பந்தை நோக்கி செல்கிறது. அதில் ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு எதிராக விளையாடாமல் 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் மோதிக்கொள்கிறார்கள். எனவே கால்பந்தை போல உலக கோப்பையில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி விட்டு எஞ்சிய நேரங்களில் கிளப் போட்டிகள் விளையாடப்படுகின்றன.
நாட்டுக்காக ஆடாமல் பணத்துக்காக ஆடுகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் அல்லது பிக்பாஷ் போன்ற தொடர்களில் விளையாடினால் போதும் என்று நினைக்கிறார்களா? எனவே இந்த அம்சத்தில் ஐசிசி அதிக நேரத்தை செலவழித்து கிளப் கிரிக்கெட்டுக்கு மத்தியில் எப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும் என்று பார்க்க வேண்டும்.
கிளப் கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் பிக்பேஷ் போன்ற தொடர்கள் நீண்டகாலம் நடைபெற்று வருகிறது. இதோடு தற்போது தென்னாப்பிரிக்கா, துபாய் போன்ற தொடர்களும் வந்துள்ளதால் அனைத்து வீரர்கலும் கிளப் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்கள்” என்றார்.
மேலும் படிக்க | அயர்லாந்து கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகன் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ