புது டெல்லி: இந்தியாவின் "சிக்கனமான பந்துவீச்சாளர்" என்று அழைக்கப்படுபவர் பாபு நட்கர்னி தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை டெஸ்ட் போட்டியில் வீசி உலக சாதனை படைத்துள்ளார். இவர் தனது 86 வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மும்பையின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான நட்கர்னி 191 முதல் வகுப்பு போட்டிகளில் 500 விக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார். நாசிக்கில் பிறந்த நாட்கர்னி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 21 மெய்டன்களை வீசிய சாதனையை படைத்துள்ளார். நட்கர்னியின் மருமகன் விஜய் கரே பி.டி.ஐ-யிடம், "வயது முதிர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அவர் இறந்தார்" என்று கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நட்கர்னி இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர். இந்தியாவுக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் 1,414 ரன்கள் எடுத்து 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த செயல்திறன் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.


மும்பையில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 191 முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர், ஐநூறு விக்கெட்டுகளை எடுத்து 8,880 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அவர் தொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசியதை தான் நினைவுகூரப்படுகிறார். மெட்ராஸ் (இப்போது சென்னை) டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு பகுப்பாய்வு 32-27-5-0 ஆகும்.


நாசிக்கில் பிறந்த நாட்கர்னி 1955 ஆம் ஆண்டில் டெல்லியில் நியூசிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மேலும் 1968 ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் போட்டியும் நியூசிலாந்திற்கு எதிராக எம்.ஏ.கே பட்டோடி தலைமையில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.