தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மகளிர் அணியின் மூன்னாள் தலைவி Elriesa Theunissen, சாலை விபத்தில் இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

25-வயது ஆகும் Elriesa Theunissen கடந்த ஏப்ரல் 5-ஆம் நாள் தனது குழந்தையுடன் கார் ஒன்றில் பயனித்தபோது விபத்தில் சிக்கி இறந்ததாக கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்கா(CSA) உறுதிபடுத்தியுள்ளது. 


கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்காவின் தலைமை அதிகாரி தபாங்க் மோரேய் Elriesa Theunissen-ன் இறுதி சடங்கிள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது. 



இதுகுறித்து கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "Elriesa Theunissen-ன் இறப்பு செய்தி அறிந்து மிகந்த வருத்தம் அடைகிறோம். தேசிய விளையாட்டிலும், உள்ளூர் விளையாட்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கிய Elriesa Theunissen-ன் மறைவினை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளது.


மேலும் கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்காவின் சார்பாக மறைந்த Elriesa Theunissen-வின் குடும்பத்தார், கணவர் ஆகியோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


இலங்கை மகளிர் அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் காலடி எடுத்து வைத்த Elriesa Theunissen, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்காக மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சிறந்த ஆல் ரவுன்டரான இவர் உள்ளூர் போட்டியில் வடமேற்கு ட்ராகன் அணிக்காகவும் விளையாடியுளார். தனது முதல் பிரசவத்திற்காக விடுப்பில் சென்ற Elriesa Theunissen தற்போது சாலை விபத்தில் இறந்துள்ள விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.