இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது விளையாட்டு வாழ்க்கையில், கங்குலி(Sourav Ganguly) 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996-ஆம் ஆண்டில் அறிமுகமான முதல் போட்டியில் துவங்கி 16 சதம் அடங்கிய 7,212 டெஸ்ட் ரன்கள்(42.18 சராசரியுடன்) எடுத்துள்ளார். இந்த பட்டியலில் 35 அரைசதங்கள் மற்றும் 32 விக்கெட்டுகளும் அடக்கம். ஒருநாள் போட்டிகளில், கங்குலி 22 சதங்கள் மற்றும் 72 அரைசதங்களுடன் 11,363 ரன்கள் (40.73 சராசரியில்) எடுத்துள்ளார். இந்துடன் பந்துவீச்சில் 100 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


READ | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடத்த வாய்ப்பு இல்லை -BCCI!


இந்நிலையில் தாதா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் கங்குலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.


  • 2000-களின் முற்பகுதியில், இந்திய கிரிக்கெட் அணி(Team-India) ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பில் தவித்தபோது அணியின் நிலையை மாற்றியவர் கங்குலி. கங்குலியின் தலைமையில் அணியின் ஒருநாள் வெற்றியின் சதவீதம் 53.90-ஆக இருந்தது. 

  • கங்குலியின் தலைமையின் கீழ், இந்திய கிரிக்கெட் அணி 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அவற்றில் 76 போட்டிகளில் வென்றனர், 65 போட்டிகளில் தோல்வி கண்டது. ஐந்து போட்டிகள் முடிவின்றி முடிந்தது.

  • டெஸ்ட் போட்டிகளில் கங்குலி, தான் வழிநடத்திய 49 போட்டிகளில் 21 வெற்றிகளைப் பெற்றார். 13 போட்டிகள் தோல்வியில் முடிவடைந்தது. மற்றும் 15 போட்டிகளை சமன் செய்தார், இதனால் அவரது டெஸ்ட் வெற்றி சதவீதம் 42.85-ஆக இருந்தது.

  • யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற விளையாட்டு மாற்றிகளுக்கு வாய்ப்புகளை வழங்கியவர் கங்குலி தான்.

  • உள்நாட்டிலும் சரி, தொலைதூர டெஸ்ட் தொடரிலும் சரி அவரது சாதனைகள் நீண்டுகொண்டே இருந்தது. தொலைதூர ஆட்டங்களில் 51 ஒருநாள் போட்டிகளுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் 24 போட்டிகளில் அணியை வெற்றிகளுக்கு இட்டுச் சென்றுள்ளார்.  

  • தொலைதூர டெஸ்ட் போட்டிகளில், தாதா 28 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 11 போட்டிகளில் வெற்றி, 10-ல் தோல்வியடைந்தார். 7 போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளார்.


READ | BCCI தலைவர் சவுரவ் கங்குலி; ICC-ன் புதிய தலைவராக வாய்ப்பு...


  • 2002 நாட்வெஸ்ட் தொடரின் போது, ​​கங்குலி இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை வெறும் மார்போடு( டி-சர்டை கழற்றி காற்றில் சுற்றி) கொண்டாடினார் - அவரது ரசிகர்கள் அனைவரும் தெளிவாக நினைவில் வைத்திருக்கும் நினைவுகளில் ஒன்று இது.

  • 1999-ஆம் ஆண்டு டவுண்டனில் நடந்த உலகக் கோப்பை தொடரில், கங்குலி (183) மற்றும் திராவிட் (145) ஆகியோர் இலங்கைக்கு எதிரான போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்கள் கூட்டாண்மை பதிவு செய்தனர். இது ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் எடுத்த முதல் கூட்டாண்மை ஆகும்.