இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கங்குலிக்கு ஒரு தனி இடம் உண்டு.  கங்குலி இந்திய அணியில் விளையாண்ட காலகட்டத்தில் ஒரு தரப்பு ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு ஒரு தரப்பு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட வீரராக இருந்தார்.  கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த சமயம் இந்திய கிரிக்கெட்டுக்கு விடிவு காலமாக கூறப்பட்டு வருகிறது.  ஆப் சைடில் கங்குலியின் திறமையை யாராலும் முறியடிக்க முடியாது.  மேட்ச் பிஇந்தியகில் இந்திய அணி ஈடுபட்டு இக்கட்டான நிலையில் இருந்தபோது அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் கங்குலி.  ராகுல் டிராவிட்,சச்சின், அணில் கும்ப்ளே போன்ற வீரர்களுடன் இணைந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு பலம்வாய்ந்த அணியை உருவாக்கினார்.  வெற்றிகரமான கேப்டனாக இருந்த கங்குலி 2003ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டி வரை இந்திய அணியை வழிநடத்தி சென்றார்.  இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான கேப்டனாக கருதப்படும் தோனியை முதன்முதலில் அணியில் சேர்த்ததும் கங்குலி தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


வான்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்து அணி வீரர் பிலின்டாப் இந்திய அணியை வென்றவுடன் தனது சட்டையை கழற்றி மைதானத்தில் வலம் வந்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2002ஆம் ஆண்டு லார்ட்ஸ்ல் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு பால்கனியில் இருந்து கங்குலி தனது சட்டையை கழற்றி வெற்றியைக் கொண்டாடினார்.  இது கிரிக்கெட் ரசிகர்களால் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இடது கை பேட்ஸ்மேனான கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7212 ரன்கள், 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  311 ஒருநாள் போட்டிகளில் 11363 ரன்கள், 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அன் டோல்ட்ட ஸ்டோரி 2016ம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.  அதன்பின் 2017 ஆம் ஆண்டு சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் சச்சின் பயோபிக் டாக்குமெண்டரி திரைப்படமாக வெளிவந்தது.  இதனை தொடர்ந்து தற்போது கங்குலி தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதற்கு கங்குலி ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் உலகில் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 



மேற்கு வங்க அரசு கங்குலிக்கு 2013ஆம் ஆண்டு பங்க பிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றார் சௌரவ் கங்குலி.  தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார் சவுரவ் கங்குலி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR