2011 உலக கோப்பை போட்டி இறுதியாட்டத்தில் இந்தியா வென்றதற்கு யார் காரணம் ?. இப்போதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் ஜாலியாக விவாதிக்கும் விஷயங்களில் இந்தக் கேள்வி முக்கியமானதாகும். கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு போய் 91 ரன்கள் எடுத்து, இப்போதும் மறக்க முடியாத சிக்ஸரோடு ஆட்டத்தை முடித்துவைத்த தோனியா அல்லது ஷேவாக், சச்சின் வெகு சீக்கிரத்தில் அவுட் ஆகி வெளியேற, 31-2 என தடுமாறிய நிலையில் கிடந்த இந்தியாவை 223 ரன்கள் வரை எடுத்துக்கொண்டுச் சென்று 97 ரன்கள் எடுத்த கவுதம் காம்பீரா ? என்று ரசிகர்கள் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் வரை விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘அசால்ட்டா நெனக்காதீங்க’ எப்போது வேண்டுமானாலும் விராட் கோலி ‘ஃபார்முக்கு’ வருவார் - பாக். வீரர் யாசீர் ஷா எச்சரிக்கை


இதுமாதிரியான நேரத்தில்தான், கவுதம் காம்பீர், தோனிக்கு எதிராக காட்டமான கருத்துக்களை கூற ஆரம்பித்தார். அதன்பிறகு இந்திய அணியின் செயல்பாடுகளையும், வீரர்களின் ஆட்டத்திறன்களையும் தொடர்ந்து பாராட்டியும், விமர்சித்தும் வருகிறார் காம்பீர். 


இந்நிலையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நீண்ட நாட்களாக ஃபார்மில் இல்லாத விராட் கோலி இந்த ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்தார். சர்வதேச அளவில் விராட் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது. இதனால் ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்கும் போதும் அவர் மீண்டும் பார்முக்கு வர வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 


இந்த ஆட்டத்தின் மூலம் விராட் கோலி கம்பேக் கொடுத்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் ஆசம் கருத்துத் தெரிவித்த நிலையில், பல கிரிக்கெட் ரசிகர்கள் இது விராட் கோலியின் ஆட்டமேயல்ல என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கவுதம் கம்பீரும் விராட் கோலியின் ஆட்டத்தைக் குறித்து விமர்சித்துள்ளார். 


இதுகுறித்து அவர் பேசியதாவது, ‘சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்த ரன்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும். ரோஹித் ஷர்மாவின் விக்கெட் சரிந்த சிறிது நேரத்தில் விராட் கோலி அப்படி ஒரு ஷாட்டை ஆடியதால் மிகவும் ஏமாற்றமடைந்து இருப்பார். ஒரு இளம் வீரர் அந்த மாதிரியான ஷாட்டை விளையாடியிருந்தால் நிறைய விமர்சனங்கள் ஏற்பட்டு இருக்கும். நீங்கள் 34 பந்துகளில் விளையாடி 35 ரன்கள் எடுத்தீர்கள். உங்கள் கேப்டன் இப்போது தான் ஆட்டமிழந்தார். 


நீங்கள் உங்கள் இன்னிங்ஸை இன்னும் சற்று சிறப்பாக கட்டமைத்து விளையாடி இருந்தால், முடிவை மேலும் எளிதாகி இருக்கலாம். நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அப்போது நீங்கள் ஒரு பெரிய ஷாட்டை ஆட முயற்சிக்கிறீர்கள். ஆனால் இங்கே நீங்கள் அடித்த ஷாட் சிக்ஸர் அடிக்க முயற்சிக்காமல் ஆட்டமிழந்து உள்ளீர்கள்.’ என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | எனக்கு டிப்ரஷனா? என்ன இப்படி சொல்லிட்டீங்க? விளக்கம் கொடுக்கும் விராட் கோலி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ