கேப்டனுக்கு இவர் தான் தகுதியானவர் - கவாஸ்கர் சொல்லும் வீரர் யார்?
இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலம் வாய்ந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி, அந்தப் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ALSO READ | விராட் கோலி விலகலுக்கு ரோகித் ஷர்மாவின் ரியாக்ஷ்ன்..!
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், விராட் கோலி கேப்டன்ஷிப்பில் இருந்து விலகியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார். இது நடக்க வாய்ப்பு இருந்தது, ஆனால் விராட் கோலியே விலகியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியை தழுவும் என யாரும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய டெஸ்ட் அணிக்கு யாரை புதிய கேப்டனாக நியமிக்கலாம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த கவாஸ்கர், ரிஷப் பன்ட் சரியான தேர்வாக இருப்பார் எனக் கூறியுள்ளார். 24 வயதாகும் ரிஷப் பன்டுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும்போது, இந்திய அணிக்கு புத்துணர்ச்சியாக இருக்கும் எனக் கூறிய கவாஸ்கர், அவரது தலைமையில் நீண்ட காலம் இந்திய அணி விளையாடும் வாய்ப்பு உருவாகும் எனக் கூறினார். மேலும், அவரது தலைமையிலான இந்திய அணி பொறுப்பை உணர்ந்து விளையாடும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார். மிக இளம் வயதில் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகள் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ALSO READ | ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR