டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா வியாழக்கிழமை நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவில் சவுர் உகுவேவிடம் (ரஷ்ய ஒலிம்பிக் வீரர் ) 4-7 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார். 23 வயதான அவர் சுஷில் குமாருக்குப் பிறகு மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் (Ravi Dahiya wins Silver) வென்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரர் ஆனார். இறுதிப் போட்டியில் ரவிகுமார் கடுமையாகப் போராடினார். ஆனால் ரஷ்ய மல்யுத்த வீரர் ஒரு கட்டத்தில் அதிக புள்ளிகளை எடுத்தார். 2018 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் உகுவேவ் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிக்குத் தகுதி பெற்ற சுஷில் குமாருக்குப் பிறகு 23 வயதான தஹியா தனது முந்தைய இரண்டு போட்டிகளிலும் தனது திறமையான யுத்திகளால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிபோட்டிக்கு சென்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரர் ஆவார்.


ALSO READ | 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா


ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள நஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த தஹியா தனது ஆறு வயதில் இருந்து அகாரா கிராமத்தில் பயிற்சி பெறத் தொடங்கினார். 12 வயதில், அவர் புதுடெல்லியின் சத்ரசல் ஸ்டேடியத்தில் பயிற்சியாளர் சத்பாலின் கீழ் பயிற்சி பெற்றார். 


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது, அதில் இரண்டு வெள்ளி (ரவி தஹியா மற்றும் மீராபாய் சானு) மற்றும் மூன்று வெண்கலம் (பிவி சிந்து, லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி).


நேற்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனஜெவ் (Nurislam Sanayev) என்பவரை தோற்கடித்து, இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் சிங்க பெண்கள் - 3 பதக்கங்கள் வென்று தந்த தங்க மங்கைகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR