மீண்டும் ஐசிசி தலைவராகிறார் கிரேக் பார்க்லே - யார் இவர்?
ஐசிசியின் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லே, அடுத்த இரண்டு ஆண்டுக்கும் அதே பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவர் பதவிக்கு தேர்வு நடைமுறை சமீபத்தில் நடந்தது. தற்போது, தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லே நீடிப்பாரா அல்லது அவரை எதிர்த்து யாரும் போட்டியிடுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்தது.
முதலில், ஐசிசி தலைவர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வந்த நேரத்தில், பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து கங்குலி விலகினார். இதனால், அவர் ஐசிசி தலைவராக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கு பிசிசிஐ பரிந்துரைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது, ஆனால் கங்குலி ஐசிசி பொறுப்புக்கு ஏதும் விண்ணப்பிக்கவில்லை.
தொடர்ந்து, ஜிம்பாப்வேயின் தாவெங்வா முகுஹ்லானி, கிரேக் பார்க்லேவுக்கு எதிராக தலைவர் பொறுப்பு விண்ணப்பித்தார். ஆனால், அவரும் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதன்மூலம், போட்டியின்றி தேர்வான இரண்டாவது முறையாக தேர்வான கிரேக் பார்க்லே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐசிசியின் தலைவராக நீடிப்பார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 'கங்குலியை தூக்கியதற்கு இழப்பீடா இத பண்ணுங்க' - பிரதமரிடம் மம்தா...
வழக்கறிஞரான பார்க்லே, நியூசிலாந்தைச் சேர்ந்தவர். இவர் 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பையின் இயக்குநராக செயலாற்றினார்.
தற்போது மீண்டும் தலைவராக தேர்வானது குறித்து அவர் கூறுகையில்,"ஐசிசியின் தலைவராக மீண்டும் தேர்வாகியிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. சக ஐசிசி இயக்குநர்களுக்கு எனது நன்றியை உரிதாக்கிக்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், கிரிக்கெட்டின் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தெளிவான திசையை வழங்கும் எங்கள் உலகளாவிய வளர்ச்சி மூலோபாயத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளோம்.
கிரிக்கெட்டில் தொடர்ந்து செயலாற்றுவது தற்போது மேலும் உற்சாகமான நேரமாக அமைந்துள்ளது. மேலும் கிரிக்கெட்டின் முக்கிய சந்தைகளில் அதனை வலுப்படுத்தவும், அதைத் தாண்டி அதை வளர்க்கவும் எங்கள் உறுப்பினர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். மேலும் உலகில் அதிகமானோர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்," என்றார்.
முகுஹ்லானி மேலும் கூறியதாவது: "ஐசிசி தலைவராக கிரெக்கை மீண்டும் நியமித்ததற்கு அவரை வாழ்த்த விரும்புகிறேன், ஏனெனில் அவரது தலைவராக தொடர்வது, கிரிக்கெட்டின் நலனுக்கானது. எனவே எனது வேட்புமனுவை திரும்பப் பெற முடிவு செய்தேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ