நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னை ஃபுட்பால் கிளப் அணியும், நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி ஈஸ்ட் யுனைடட் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. சென்னை அணியின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தனர் ரசிகர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேரு விளையாட்டரங்கில் சில ரசிகர்கள் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி பெண் ரசிகர்களை கேலி, கிண்டல் செய்துள்ளனர். மேலும் வடகிழக்கு ரசிகர்கள் குறித்து இனவெறி கருத்துக்களையும் தெரிவித்துள்ளதாக ஈஸ்ட் யுனைடட் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


சென்னை ரசிகர்களின் இந்தப் போக்கு மிகவும் கண்டனத்துக்குரியது என்று அவர் தனது அதிருப்தி தெரிவித்துள்ளார்.