ஹர்பஜனை புலம்ப வைத்த சாஹல்..! காரணம் இதுதான்
கிரிக்கெட் வீரர் சாஹலிடம் இருந்து பேடிஎம்மில் 4 ரூபாய் வந்ததால், ஹர்பஜன் குழப்பமடைந்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜனுக்கு 4 ரூபாய் பேடிஎம் மூலம் அனுப்பியுள்ளார். எதற்காக அவர் பணம் அனுப்பினார்? என தெரியாத ஹர்பஜன், அந்த ஸ்கிரீன்ஷாட்டை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், சாஹல் எதற்கு எனக்கு பணம் அனுப்பினார்? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே துருப்புச்சீட்டு இவர் தான்: ஹர்பஜன் சிங் கணிப்பு
இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் நாட்களில் பேடிஎம் காஷ்பேக் ஆஃபர் வழங்குகிறது. 4 ரூபாய் தனக்கு தெரிந்தவருக்கு அனுப்பினால், 100 ரூபாய் காஷ்பேக் கொடுக்கும். இந்த ஆஃபரை சாஹல் உங்களிடம் முயற்சி செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். சாஹலும், பாஜி... இது பேடிஎம் காஷ்பேக் ஆஃபர். உங்களுக்கு 4 ரூபாய் அனுப்பியதால் எனக்கு 100 ரூபாய் காஷ்பேக் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சாஹலின் இந்த பதிலுக்கு ரிப்ளை செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், நான் எப்படி இந்த காஷ்பாக் ஆஃபரை பெறுவது? என கேட்டார். அதற்கு பதிலளித்த பேடிஎம், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் நாட்களில் பேடிஎம் மூலம் 4 ரூபாய் பிறருக்கு அனுப்பினால், உங்களுக்கு 100 ரூபாய் காஷ்பேக் கிடைக்கும் கெயில் எனத் தெரிவித்துள்ளது. இது பேடிஎம்மின் வித்தியாசமான விளம்பர யுக்தி என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
ALSO READ | U-19 WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR