இந்திய ரசிகர்களால் ’பாஜ்ஜி’ ‘த டர்பனேட்டர்’ என பட்டப்பெயருடன் செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் (Harbhajan Sing), இந்திய அணியின் நட்சத்திர பவுலராக விளங்கினார். 1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | 2006 ஆம் ஆண்டே ஓய்வு முடிவு எடுத்த ’தோனி’ - வெளியான ருசிகர தகவல்


ஐ.பி.எல் போட்டியில் சச்சினுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், கேப்டனாக இருந்து சாம்பயன் லீக் பட்டத்தையும் வென்று கொடுத்தார். அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜனை, அந்த அணி அண்மையில் ஏலத்தில் பங்கேற்பதற்காக விடுவித்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் ஏலத்தில், தன்னை ஏலம் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருப்பதாக எண்ணிய அவர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் உள்ளார்.


மேலும், அடுத்த ஆண்டு முதல் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக, ஏதாவதொரு ஐ.பி.எல் அணியுடன் இணைந்து பணியாற்றவும் முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன், களத்தில் விளையாட்டைத் தாண்டிய சீண்டல்களுக்கு பதிலடி கொடுக்க ஒருபோதும் தயங்கியதே இல்லை.


Also Read | 10 POINTS : இந்தியா - நியூசிலாந்து தொடரின் சுவாரஸ்யமான சம்பவங்கள்


குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிகளில் அவர்களின் சீண்டல்களுக்கு சற்றும் குறைவில்லாத பதிலடி கொடுத்துவிடுவார். இந்திய அணியின் வெற்றிக்கு பல போட்டிகளில் முக்கிய தள கர்த்தராகவும் இருந்துள்ளார். அவர் கிரிக்கெட் பயணத்துக்கு விடை கொடுத்தாலும் அடுத்த இன்னிங்ஸ் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துவதற்கு ரசிகர்கள் தயாராக உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


Telegram Link: https://t.me/ZeeNewsTamil