புது டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் லாக்-டவுன் உத்தரவை அறிவித்தார். ஆனாலும் மக்கள் தொடர்ந்து விதிகளில் உலாவதும் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறுவது குறித்து தனது கோபத்தையும் அதிருப்தியையும் தெரிவித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இன்று (வியாழக்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளியை பகிர்ந்து உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹர்பஜன் தனது ட்விட்டர் கணக்கில், "ஒரு கும்பல் காவல்துறையினரைத் தாக்கும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில்,  “காவல்துறை மீதான நாம் நமது காட்டுமிராண்டி தனமான அணுகுமுறையை மாற்ற வேண்டும். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. ஆனாலும் அவர்கள் தேசத்துக்காக தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.. நாம் ஏன் வீட்டில் இருக்க முடியாது. நாளைய ஒரு நல்ல நாளுக்காக  நாம் விவேகமாக இருக்க முடியாது. Plz விவேகமானவராக இருங்கள்” எனக் கூறியுள்ளார். 


 



ஹர்பஜன் ட்விட்டரில் சமூக விலகல் (தனிமைபடுத்துதல்) குறித்து தனது ஆதரவை பலமுறை குரல் கொடுத்துள்ளார். பாக்கிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி சமூக சேவையைச் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளை அவர் சமீபத்தில் பாராட்டியிருந்தார். 


ஹர்பஜன் பகிர்ந்த செய்திக்கு பதிலளித்த அஃப்ரிடி, அன்பான வார்த்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.