பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் "காஃபி வித் கரண்" நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அதில் சில கேள்விகள் கேட்டகப்பட்டது. கேள்விகளுக்கு இருவருமே பதில் அளித்தனர். அப்பொழுது பெண்களை பற்றி சில கருத்துகளை வெளியிட்டார் ஹர்திக் பாண்டியா. இவரின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தது. பலர் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஹர்திக் பாண்டியா. மேலும் என் பேச்சால் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்நிகழ்ச்சியின் தன்மையினால் அவ்வாறு பேசிவிட்டேன். யாரையும் அவமரியாதை செய்யவோ அல்லது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று கூறினார். எனினும் இருவர் மீதும் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அதிருப்தியில் உள்ளது. குறைந்தபட்சம் 2 போட்டியில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்குமாறு பிசிசிஐயின் சட்டக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. 


இந்தநிலையில், இன்று கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டித் தலைவர் வினோத் ராய், "ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தவுடன் தான் இறுதி முடிவு சொல்லமுடியும். தற்போது இருவருக்கும் போட்டியில் விளையாட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது எனக் கூறினார்.