இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமாரும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்துவீசினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக காயத்திலிருந்து மீண்டிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் அனல் பறந்தது. 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருக்கட்டத்தில் ஆட்டம் நெருக்கடியான நிலைக்கு செல்ல பாண்டியாவின் இன்னிங்ஸ் அணியை வெற்றிப்பெற செய்தது. பேட்டிங்கில் அவர் 17 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். 



இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வேண்டும். அவர்தான் அடுத்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன். தோனி மாதிரியான வீரராக பாண்டியா மாறிவிட்டார். அவர் மிக அமைதியாகவும் இருக்கிறார். நன்றாக பேட்டிங்கும் செய்கிறார்.


மேலும் படிக்க | ஆல்ரவுண்டர்கள் தரவரிசை - டாப் 5ல் ஹர்திக் பாண்டியா


மிகவும் கடினமாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டனாவதை நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதும், ஐபிஎல் போட்டியின்போதும் அவர் தனது சுபாவத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. தேசிய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளையும், திறன்களையும் அவர் பெற்றிருக்கிறார்” என கூறியுள்ளார்.


 



முன்னதாக, ஐசிசி வெளியிட்ட டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் பாண்டிய 5ஆவது இடத்துக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ