Hardik Pandya: லக்னோ பிட்ச் குறித்து பாண்டியா அதிருப்தி..! பிசிசிஐ மீது சாப்ட் சாடல்
Lucknow pitch: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது 20 ஓவர் போட்டியில் பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது 20 ஓவர் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 98 ரன்கள் மட்டுமே எடுக்க, சேஸிங் இறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. வெறும் 98 ரன்கள் என்றாலும், இந்த பிட்சில் அதனை சேஸ் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. வேகப்பந்து, சுழற்பந்து என இருமுனை தாக்குதல்களையும் எதிர்கொள்ள இரு அணி பேட்ஸ்மேன்களுமே திணறினர். எப்படியோ இந்திய அணி பக்கம் அதிர்ஷ்ட காற்றும் கொஞ்சம் வீசியதால் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா படை வெற்றி பெற்று, தொடரை 1-1-க்கு என சமன் செய்தது.
மேலும் படிக்க | ரோகித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், வைரலாகும் Video!
போட்டிக்குப் பிறகு பேசிய ஹர்த்திக் பாண்டியா, எந்த வகையான மைதானமாக இருந்தாலும் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறோம். வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கடந்த 2 போட்டிகளும் நடைபெற்ற மைதானங்கள் 20 ஓவர் போட்டிகளுக்கு தயார் செய்யப்பட்டது போல் இல்லை. மைதானம் தயார் செய்பவர்கள் முன்கூட்டியே தயார் செய்தால் மட்டுமே இத்தகைய பிரச்சனைகள் இருக்காது என தெரிவித்தார். பந்து எப்படி வருகிறது என்பதை கணிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ள பாண்டியா, மைதானம் தயார் செய்பவர்கள் எந்த போட்டிக்கு மைதானம் தயார் செய்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால், அந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிவடைந்ததும், இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் பங்கேற்க இருக்கிறது.
மேலும் படிக்க | ரோகித் கூறிய ஒரு ’பாயிண்ட்’ - கேப்டன்ஷிப்பை இழந்த விராட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ