கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  ஐசிசி நடத்தும் எந்த ஒரு போட்டிகளிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோற்றது இல்லை.  இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கியமாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.  முக்கியமான கட்டத்தில் இறங்கிய பாண்டியா 8 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.  மேலும், காயம் காரணமாக பாண்டியா பவுலிங்கும் போடவில்லை.  பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை எடுக்க இந்திய அணி திணறிய போது 6வது பவுலர் இருந்திருந்தால் உதவியாக இருந்து இருக்கும் என்றே அனைவருக்கும் தோன்றியது.  நடந்து முடிந்த ஐபிஎல் 2021 போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பவுலிங் போடவில்லை.  



கடந்த ஜூலை மாதம் ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக பாண்டியா பந்து வீசினார்.  மேலும், 2019ம் ஆண்டில் இருந்தே பவுலிங்கில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார்.  இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு பவுலர் தேவைப்படும் நிலையில் பாண்டியா பவுலிங் போடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருக்கிறது.  இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில், பாண்டியா மற்றும் புவனேஷ்குமார் சிறப்பாக ஆடவில்லை என்றால் பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடிய இஷான்னை அணியில் எடுக்கலாம்.  மேலும், தாகூர் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.  இவர்கள் இருவரையும் அணியில் சேர்க்கலாம் என்று கூறியுள்ளார்.


 



இதனிடையில், ஹர்திக் பாண்டியா பவுலிங் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.  நேற்று பிட்னஸ் பயிற்சியில் ஈடுபட்ட பாண்டியா புவனேஷ்வர் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு 20 நிமிடங்களுக்கு பவுலிங் செய்துள்ளார்.  இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ஆலோசகர் எம்எஸ் தோனி இருவரும் ஹர்திக்கின் முன்னேற்றத்தை கண்காணித்து வருகின்றனர்.


ALSO READ நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் கேல் ரத்னாவிற்கு பரிந்துரை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR