இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகல்
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகல் எனத் தகவல்
புது டெல்லி: நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹிட்மேன் என்று அழைக்கப்படும் வலது கை பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஐந்தாவது மற்றும் இறுதி டி 20 போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து விளையாடிய டி 20 தொடரின் கடைசி போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அந்த போட்டி பே ஓவன் மைதானத்தில் நடந்து முடிந்தது.
நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் 14,000 ரன்களை எட்டிய எட்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதனால் அன்றைய போட்டியின் போது அவர் பீல்டிங் செய்ய களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தினர். ஏனென்றால் அந்த போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. கடைசி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.