சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : வெள்ளிப் பதக்கம் வென்றது இந்தியா
லண்டனில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தங்க பதக்கத்தை வென்றது. இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்திய அணி கடைசியாக கடந்த 1982-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த தொடரில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. தற்போது 14-வது முறையாக ஆஸ்திரேலியா கோப்பை வென்றதுள்ளது.