புதுடில்லி: 2019 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பித்து 16 நாட்கள் ஆகின்றன. ஆனால் மிகப்பெரிய போட்டிகள் இன்னும் உள்ளன. அதாவது இந்தியா - பாகிஸ்தான் (India vs Pakistan) போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. உலகிலேயே மிகவும் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் போட்டி என்றால், அது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமாகும். இன்னும் சில மணி நேரங்கள் தான் இந்தியா - பாகிஸ்தான் எதிரெதிரே மோத உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முறை, இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16 அன்று மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட உள்ளன. ஆனால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஆட்டம் ரத்தாகி வருவதால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் மழையின் காரணமாக பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் எழுந்த வண்ணம் உள்ளது.


உலக கோப்பை தொடர் தொடங்கிய முதல் 15 நாட்களில் 18 போட்டிகள் நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால் 14 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகள் மழையின் காரணமாக பாதித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நான்கு போட்டிக்கும் இடையே மழையின் குறுக்கீடு இருந்துள்ளது. இதுவரை மூன்று போட்டிகளில் ஒரு பந்துக் கூட வீசப்பட வில்லை. ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஆட்டம் தடை செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்தில் பெய்து வரும் மழை தான். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் 50 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.


இப்போது இந்தியா - பாக்கிஸ்தான் (INDvsPAK) போட்டியைப் பற்றியும், அடுத்த மூன்று நாட்களின் வானிலை பற்றியும் பேசுவோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடக்க உள்ளது. எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா எட்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல பாகிஸ்தானும் எட்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. ஆனால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


வானிலை ஆய்வு மையம் கருத்துப்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கூட மழையின் காரணமாக பாதிக்கப்படலாம். அன்று பெரும்பாலும் மான்செஸ்டரில் மேகமூட்டமான வானிலை இருக்கும். இடை இடையில் மழை பெய்யலாம். மதியத்திற்கு பிறகு கனகனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.


ICC உலகக் கோப்பை மற்றும் வானிலை மதிப்பீடுகள்:


தேதி ஆட்டம் இடம் வானிலை மதிப்பீடு
ஜூன் 15 இலங்கை vs ஆஸ்திரேலியா ஓவல், லண்டன் வானிலை சுத்தமாக இருக்கும்
ஜூன் 15 ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் கார்டிஃப் மழைக்கு வாய்ப்பு
16 ஜூன் இந்தியா vs பாகிஸ்தான் மான்செஸ்டர் மேகமூட்டம் /
இடையில் மழை இருக்கும்
17 ஜூன் வெஸ்ட் இண்டீஸ் vs பங்களாதேஷ் டோன்டேன் வானம் சுத்தமாக இருக்கும்

உலகக்கோப்பை தொடரை பொருத்த வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆறு முறை மோதியுள்ளன. அதில் அனைத்து போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. தற்போதூ நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டில் இந்தியா வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம். அதேவேளையில் பாக்கிஸ்தானுக்கு ஆறுதலான விஷயம் என்னெவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது தான். அதே மனநிலையில் ஜூன் 16 அன்று இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடக்கூடும்.