முழங்கை காயத்தால் தவித்து வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆர்ச்சர் தற்போது தொடரில் இருந்து விலகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனினும் ஆர்ச்சர் "எதிர்பார்த்தபடி முன்னேறி வருகிறார்" என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து வருகிறது.


24 வயதான ஆர்ச்சர், மே மாதத்தில் நடைபெறும் County Championship-ல் பங்கேற்பதற்கு முன் ஏப்ரல் நடுப்பகுதியில் மற்றொரு பரிசோதனை நடத்தப்டும் எனவும், அதன் பின்னரே அவரது நிலமை குறித்து ஆராய்ந்து போட்டிகளில் சேர்க்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே இந்தியாவில் IPL 2020 ஆனது மார்ச் 29-ஆம் தேதி துவங்கி மே 24-வரை நடைபெறவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆர்ச்சர் தனது மருவாழ்விற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அகேடமியில் இருக்கவேண்டி உள்ளதால், எதிர்வரும் IPL தொடரில் அவர் பங்கேற்ற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வியாழக்கிழமை சசெக்ஸுடன் ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டபோது, ​​ஆர்ச்சர் காயத்தில் இருந்து "நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும்"., எனினும் IPL தொடர் குறித்து ஒரு உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்திள்ளார்.


எனினும் வரும் ஜூன் 4-ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடரின் போது ஆர்ச்சரின் வேகம் போட்டிகளில் இருக்கும் என தெரிகிறது. "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவரது தயாரிப்பு உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்காக" அவர் சசெக்ஸிற்காக விளையாடுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சனியன்று தெரிவித்துள்ளது.


IPL 2020 குறித்து பேசுகையில்., 2018-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 7.20 கோடி செலுத்தி ஆர்ச்சரை தங்கள் அணிக்கு இழுத்தது. எனினும் தற்போது அவரது இடைவெளி ராஜஸ்தான் அணியின் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.