IND vs SA, Virat Kohli Century: நடப்பு உலகக் கோப்பை தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அரையிறுதியில் தங்கள் இடங்களை உறுதிசெய்ய காத்திருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அந்த வகையில், அந்த இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி மிகப்பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. இந்த இரு அணிகளும் கண்டிப்பாக நாக்-அவுட்டில் எப்படி விளையாடும் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, அதற்கு ஓர் ஒத்திகையாக இன்றைய போட்டி அமைந்துள்ளது. 


டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி மாற்றம் செய்யாத நிலையில், தென்னாப்பிரிக்காவில் கோட்ஸிக்கு பதில் ஷம்ஸி சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ரோஹித் - கில் ஜோடி அதிரடியாக ஆரம்பித்தது. இந்த கூட்டணி, 62 ரன்களை குவித்த நிலையில், ரோஹித் சர்மா 24 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கு ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மான் கில் 23 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஜோடி மிக நிதானமாக விளையாடி ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியது. 


மேலும் படிக்க | இந்திய அணியில் இவர் இனி தண்ணி கேன்தான் கொடுக்கனும்... பிக்ஸ் ஆன பிளேயிங் லெவன்!



இருவரும் நிதானம் விளையாடி அரைசதத்தை கடந்தாலும், அரைசதம் அடித்த பின் ஷ்ரேயாஸ் சற்று வேகத்தை கூட்டினார். இந்த ஜோடி 134 ரன்களை குவித்த நிலையில், ஷ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேஎல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 22 ரன்கள் அடித்து கேமியோ இன்னிங்கிஸ் விளையாடினார். 


இதனிடையில், விராட் கோலியும் தனது 49ஆவது ஓடிஐ இன்னிங்ஸை அடித்து சச்சினின் அதிக ஓடிஐ சதங்கள் சாதனையை சமன் செய்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை காண்பிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது. கோலி 101 ரன்களுடனும், ஜடேஜா 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் இங்கிடி, யான்சன், ரபாடா, மகராஜ், ஷம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். 26 எக்ஸ்ட்ராஸ் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | IND vs SA: 300 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாது - ஈடன் கார்டன் பிட்ச் ரிப்போர்ட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ