IPL 2024 News In Tamil: நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்த உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. முன்னதாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன. இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்கா டி20 (SA20) தொடர் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விறுவிறுப்பாக நடைபெறும் S20 தொடர்


ஐபிஎல் தொடரை போன்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெய்ண்ட்ஸ், எம்ஐ கேப் டவுண் ஆகிய ஆறு அணிகள் மோதுகின்றன. முதல் சீசன் கடந்தாண்டு நடைபெற்ற நிலையில், சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப் பெற்றது. 


அந்த வகையில், இந்தாண்டு இரண்டாம் சீசன் ஜன.10ஆம் தேதி தொடங்கியது. இதில், 6 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். பின்னர், அதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். அரையிறுதியில் குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 பாணியில் அணிகள் தேர்வாகி வரும் பிப். 10ஆம் தேதி தொடர் இறுதிப்போட்டி நடைபெறும். மொத்தம் 30 லீக் போட்டிகளில் 10 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.


மேலும் படிக்க | மைதானத்தை வாடகைக்கு எடுக்கும் ஐசிசி..! டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் ஏற்பாடுகள்


மோசமான பார்மில் டூ பிளேசிஸ்


குறிப்பாக, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பாப் டூ பிளேசிஸ் செயல்பட்டு வருகிறார். இதில் இவரின் பேட்டிங் பார்ம் மிக மோசமாக உள்ளது. சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டுமே பாப் டூ பிளேசிஸ் ஓய்வு பெற்றிருக்கிறார், ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவர் விளையாடி மூன்றாண்டுகளுக்கு மேல் இருக்கும். இந்த சூழலில், அவர் டி10 மற்றும் SA20 லீக்கில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் விளையாடிய கடந்த 7 போட்டிகளில் வெறும் 49 ரன்களை மட்டுமே டூ பிளேசிஸ் அடித்துள்ளார். 


இது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். 2022 மற்றும் 2023 ஆகிய இரு சீசன்களிலும் ஆர்சிபி அணியை கேப்டனாக வழிநடத்துவது மட்டுமின்றி ஓப்பனிங் பேட்டராக கோலியுடன் களமிறங்கி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 700 ரன்களை குவித்து அதிகபட்ச ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார். 


ஆர்சிபிக்கு வரும் பாதிப்புகள்


இத்தகைய சூழலில், பாப் டூ பிளேசிஸ் மோசமான பேட்டிங்கை தொடர்ந்தால் ஆர்சிபி அணிக்கு பல முக்கியமான கட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த மூன்று விஷயங்களை கூறலாம். டி20யில் பேட்டிங்கின் போது ஒரு அணிக்கு அதிக ரன்களை குவிக்க உதவுவது பவர்பிளே ஓவர்கள்தான். எனவே, பாப் டூ பிளேசிஸ் இந்த மோசமான பார்மை தொடர்ந்தால் ஆர்சிபிக்கு சுமாரான தொடக்கமே அமையும். 


மற்றொரு விஷயம், மறுமுனையில் பேட்டிங் இறங்கும் விராட் கோலி அவரது இயல்பான ஆட்டத்தை விடுத்து, அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளாக்கப்படுவார். விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் அவரது இடத்தை உறுதி செய்ய அதிரடி பாணியை கைக்கொள்ளும் முடிவில் இருக்கிறார் என்பது ஆப்கானிஸ்தான் தொடரிலேயே தெரிந்தாலும், ஆர்சிபியின் காம்பினேஷனில் சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. 


இந்த பிரச்னைகளால், ஆர்சிபி அணியின் அடிப்படை பலமான பேட்டிங்கே மொத்தமும் சரியும் எனலாம். ஆர்சிபி பந்துவீச்சாளர்களை விட பேட்டர்களை அதிக நம்பியிருப்பதால் ஓப்பனிங்கில் இரண்டு இடத்தையும் பாதிக்கும் விஷயத்தை அந்த அணி நிச்சயம் கருத்தில் கொள்ளும். எனவே, சமூக வலைதளங்களில் பலரும் இப்போத விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி வரப்போவதாக ஆருடம் கூறி வருகின்றனர். அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றாலும், SA20 தொடரின் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதை பொருத்துதான் அவர் மீது கேள்விகள் குறையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 


மேலும் படிக்க | IND vs ENG: இந்த வீரர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம் - விளையாட வாய்ப்பே கிடைக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ