Indian Cricket Team New Adidas Jersey: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சி இன்று மாலை வெளியிடப்பட்டது. ஜெர்சியை புதிய கிட் ஸ்பான்சரான அடிடாஸ் (Adidas) வடிவமைத்துள்ளது. குறிப்பாக, டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளுக்குமான இந்திய அணியின் ஜெர்ஸியை வெவ்வேறு வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்ன மாற்றம்!


வரும் ஜூன் 7ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்ஸிகளை அணிந்து விளையாடும். மூன்று வித ஜெர்சிகளிலும் மூன்று கோடுகள் உள்ளன, இது அதன் புதிய கிட் ஸ்பான்சர்களான அடிடாஸ் நிறுவனத்தில் லோகோவுடன் தொடர்புடையது.


எவ்வளவு காலம் இந்த ஒப்பந்தம்?


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அடிடாஸ் நிறுவனத்தை பிசிசிஐக்கு கிட் ஸ்பான்சராக அறிவித்தது. "2028ஆம் ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் இந்த ஒப்பந்தமானது, விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் கிட் தயாரிப்பதற்கான பிரத்யேக உரிமைகளை அடிடாஸ் நிறுவனத்திற்கு வழங்கும். 



மேலும் படிக்க | MS Dhoni: தோனிக்கு முடிந்தது சர்ஜரி... இத்தனை மாதங்கள் ஓய்வு தேவையா?


ஆடவர், மகளிர், இளைஞர் அணிகள் உட்பட பிசிசிஐ தொடர்பான அனைத்து போட்டிகள், பயிற்சிகள் மற்றும் பயண உடைகளுக்கு அடிடாஸ் மட்டுமே சப்ளையர் ஆகும். 2023ஆம் ஆண்டு ஜூன் முதல், டீம் இந்தியா முதல் முறையாக மூன்று கோடுகளில் காணப்படும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அவர்களின் புதிய கிட் அறிமுகமாகும்" என்று பிசிசிஐ முன்பு ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. 


அடிடாஸ் குறித்து ஜெய் ஷா


இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பிசிசிஐயின் கெளரவ செயலாளர் ஜெய் ஷா,"கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவ நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும் இந்த பயணத்தில் உலகின் முன்னணி விளையாட்டு ஆடை பிராண்டுகளில் ஒன்றான அடிடாஸ் உடன் கூட்டு சேருவதில் உற்சாகமாக உள்ளது. உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் வலுவான உலகளாவிய ரீதியில் அதன் செழுமையான வரலாற்றுப் பாரம்பரியத்துடன், இந்திய கிரிக்கெட்டின் பல்வேறு வகைகளின் செயல்திறன் மற்றும் எதிர்கால வெற்றிக்கு அடிடாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.


யாருக்கெல்லாம்?


ஆடவர், மகளிர் சீனியர் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு மட்டுமின்றி, இந்தியா 'A' ஆடவர் மற்றும் மகளிர் தேசிய அணிகள், இந்தியா 'B' ஆடவர் மற்றும் மகளிர் தேசிய அணிகள், இந்தியா U-19 ஆடவர் மற்றும் மகளிர் தேசிய அணி, அவர்களின் பயிற்சியாளர்கள், மற்றும் ஊழியர்கள் என அடிடாஸ் நிறுவனம் கிட் ஸ்பான்சர் செய்வது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Sai Sudharsan: பத்திரனா ஓவரை அடித்த ரகசியம் இதுதான்: தமிழக வீரர் சாய் சுதர்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ