ICC World Cup 2023 Opening Day Ceremony: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் சுற்று போட்டிகள் அக். 5ஆம் தேதி அன்றே தொடங்கப்பட உள்ளது. நவ. 19ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில், இதன் தொடக்க விழா அக். 4ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக். 4ஆம் தேதி இரவு 7 மணி முதல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், தொடக்க விழா குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. மிகவும் பிரம்மாண்ட உலகக் கோப்பை தொடருக்கு மிக பிரம்மாண்ட தொடக்க விழா திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்நிகழ்வு நடைபெறும் பிரம்மாண்ட நரேந்திர மோடி மைதானத்தில் அதன் ஒத்திகை நிகழ்வுகள் இன்று நடதப்பட்டுள்ளன. இதில் பாலிவுட் முதல் பல்வேறு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் ஆடி, பாடி விழாவை சிறப்பிக்க  உள்ளதாகவும் கூறப்படுகிறது.



மேலும் படிக்க | அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா போட்ட வியூகம்.. ஆனால் தோல்வியில் முடிந்தது - ஏன்?


பாலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள்


ஆஷா போஷ்லே , ஷ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங் போன்ற பிரபல பாடகர்கள் இந்நிகழ்வில் பாட உள்ளனர். அதுமட்டுமின்றி ரன்வீர் சிங், தமன்னா போன்றோரின் ஃபெர்மான்ஸையும் ரசிகர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் இந்த உலகக் கோப்பையின் முகமாகவே உள்ளார் என சொல்லலாம், இந்த உலகக் கோப்பைக்கான பாடலிலும் அவர் தான் இடம்பெற்றிருந்தார். 


ஒரு நாள் முன்...


இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இதில் வழக்கத்தை உடைக்கும் வகையில், போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னாடியே தொடக்க விழா நடக்க உள்ளது. அதாவது, போட்டி 5ஆம் தேதி மதியம் தொடங்க உள்ளதால், இத்தகைய பிரம்மாண்ட போட்டியை பகலில் நடத்த இயலாது என்பதால், ஒரு நாள் முன்னாடி இரவில் அந்த நிகழ்வை திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இதில் கண்கவர் வாணவேடிக்கை மற்றும் ஒலியும், ஒளியும் நிகழ்வு இருக்கும். 


ஒரே சர்ப்ரைஸ்


இதில் தற்போது சிறப்பான மற்றும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அக். 5ஆம் தேதி இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டிக்கு டிக்கெட் உள்ள நபர்கள், முந்தைய நாள் நடைபெறும் இந்த தொடக்கவிழாவை காண அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த தொடக்க விழாவில் கேப்டன்களில் அணிவகுப்பு இருக்கும். எனவே, பார்வையாளர்கள் கோப்பையையும், கேப்டனையையும் ஒன்றாக காணும் வாய்ப்பை பெறுவார்கள் என தெரிகிறது. 


மேலும் படிக்க | 'எனக்கு பழகிவிட்டது...' உலகக் கோப்பையில் புறக்கணிப்பு - மனம் திறந்த சஹால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ