IND vs SA Match Highlights: இந்தியா - தென்னாப்பிரிக்கா (IND vs SA) அணிகள் மோதிய இன்றைய லீக் போட்டிதான் உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) மிக முக்கிய போட்டியாக பார்க்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் முன்னணி இருக்கும் அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டி, யாருக்கு முதலிடம் என்பதே முக்கிய குறியாக இருந்தது. இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு அணிகளும் இந்த போட்டிக்கு முன் வரை 7 போட்டியில் விளையாடி இருந்தன. இந்தியா இந்த 7 போட்டிகளையும் வென்றிருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே தோற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 


தொடக்க ஆட்டக்காரர்களின் அதிரடியாலும், விராட் கோலியின் (Virat Kohli) நிதானத்தாலும், ஷ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தினாலும், சூர்யகுமார், ஜடேஜாவின் நல்ல கேமியோவிலும் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 326 ரன்களை எடுத்தது. விராட் கோலி 101 ரன்களை அடித்து அவரது 49ஆவது ஓடிஐ சதத்தை பதிவு செய்து சச்சின் டெண்டுல்கரின் சதத்தை சமன் செய்தார். மேலும், ஒருநாள் அரங்கில் இந்திய மண்ணில் மட்டும் 6 ஆயிரம் ரன்களையும் விராட் கோலி இன்று கடந்தார்.


மேலும் படிக்க | தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட கிங் கோலி... பிறந்தநாளில் சாதனை சதம்! 


327 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே தலைவலி கொடுக்க ஆரம்பித்தனர். சிராஜ் டி காக்கை இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்ய அங்கிருந்து இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஜடேஜாவும் ஷமியும் சீரான இடைவெளியில் தென்னாப்பிரிக்கா பேட்டர்களை வெளியேற்ற கடைசி கட்டத்தில் குல்தீப் விக்கெட்டுகளை எடுத்து 27.1 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்காவை 83 ரன்களைக்கு ஆல்-அவுட்டாக்கியது. இதன்மூலம், இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ஜடேஜா (Jadeja) 5 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார். டெம்பா பவுமா, வான் டெர் டசன், மில்லர், யான்சன் மற்றும் 10+ ரன்களை எடுத்தனர், மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசென் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இங்கிடி மட்டுமே டக்அவுட்டானார்.



புள்ளிப்பட்டியலில் (ICC World Cup Points Table) இந்திய அணி 8 போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 2 தோல்விகளுடனும், 6 வெற்றிகளுடனும் 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் முறையே 3ஆவது, 4ஆவது, 5ஆவது, 6ஆவது இடத்தில் உள்ளன. 


அரையிறுதியில் எந்தெந்த அணி எந்தெந்த இடத்தில் இடம்பிடிக்கும் என்பது தெரியாவிட்டாலும் இந்திய அணி இனி முதலிடத்தில்தான் இருக்கும். நெதர்லாந்து அணியுடன் தோல்வியடைந்தாலும் இந்தியா முதலிடத்தில்தான் இருக்கும். எனவே, இந்திய அணி லீக் சுற்றின் முடிவில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடன் முதல் அரையிறுதிப்போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். 2ஆவது, 3ஆவது இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும்.


மேலும் படிக்க | நான் விளையாடியதில் சிறந்த கேப்டன் இவர் தான்.. தோனி இல்லை - யுவராஜ் சிங்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ