ஐதராபாத் நடந்த டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் இன்னிங்ஸ்:-


வங்களாதேசம் மற்றும் இந்திய அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் நடைபெற்று வந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி 204, முரளி விஜய் 108, ரித்திமான் சாஹா ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்கதேச அணியில் 127.5 ஓவர்களில் 388 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் 262 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் குவித்தார். ஷகிப் அல்ஹசன் 82 ரன்கள் எடுத்தார்.இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


இரண்டாவது இன்னிங்ஸ்:-


முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி வங்கதேசத்துக்கு "பாலோ-ஆன்' கொடுக்காமல் 2-ஆவது இன்னிங்சை ஆடியது. இந்தியா 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக இந்திய கேப்டன் விராத் கோலி அறிவித்தார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அஹமது, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 


இதையடுத்து 459 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணியில் தமிம் இக்பால் 3 ரன்களில் வெளியேற, செளம்ய சர்க்கார் 42 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு மோமினுல் ஹக் 27 ரன்களில் வெளியேறினார். 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


 இதன்மூலம் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.