புதுடெல்லி: மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இடையே உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்தவர். இரு வீரர்களும் களத்தில் உள்ளேயும் வெளியேயும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதைக் காணலாம். இந்திய கேப்டன் விராட் கோலி தனது சமூக வலைதளத்தில் எம்.எஸ்.தோனி (MS Dhoni) குறித்து இன்று (வியாழக்கிழமை) ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அது சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளது. இந்த புகைப்படத்தில் மகேந்திர சிங் தோனி மீது உள்ள மரியாதை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட் கோலி ட்வீட் செய்த புகைப்படம், "மொஹாலியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி பற்றியது. இந்த போட்டி 2016 ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் நடைபெற்ற ஆட்டமாகும். தனது ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்த கோஹ்லி, அதில் "இந்த போட்டியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நபர் என்னை உடற்பயிற்சி சோதனையில் ஓடுவது போல ஓடவைத்தார். அந்த இரவு மிகவும் சிறப்பு வாய்ந்தது" எனக் கூறியுள்ளார்.


 



இந்த புகைப்படத்தில், போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி முழங்காலில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். எம்.எஸ்.தோனி அவரை நோக்கிச் செல்வதைக் காணலாம். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 161 ரன்கள் என்ற இலக்கை இந்தியாவுக்கு கொடுத்தது. இந்திய அணி ஐந்து பந்து மீதம் இருந்த நிலையில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.