சாம்பியன்ஸ் டிராபி 2017: இன்று நியூசிலாந்து - இங்கிலாந்து மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 6-வது லீக்கில் போட்டியில் ஏ பிரிவு இடம் பெற்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இன்று மோதுகின்றன. போட்டி நடக்கும் கார்டிப்பில் நேற்று பலத்த மழை கொட்டியதால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றது. நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வெல்லும் நிலையில் இருந்த போது மழை கெடுத்து விட்டது. இதனால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது.
இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு பிரகாசம் ஆகிவிடும். ஆனால் அதற்கு எதிர்மறையாக நடந்தால், கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டிய கட்டாய நிலை உருவாகும்.
நியூசிலாந்து அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதில் வென்றால் தான் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும். தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 83 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 41-ல் நியூசிலாந்தும், 36-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
நியூசிலாந்து அணி:
கனே வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், லுக் ரோஞ்ச், ராஸ் டெய்லர், நீல் புரூம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், ஜேம்ஸ் நீஷம், கோரி ஆண்டர்சன்.
இங்கிலாந்து அணி:
இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டேவிட் வில்லே அல்லது ஜாக்பால், ஸ்டீவன் பின், மார்க் வுட், மொயீன் அலி, பிளங்கெட்,