சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 9-வது லீக் ஆட்டதில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் மழை பெய்து ஆட்டம் ரத்தானதால் தலா ஒரு புள்ளியை பெற்றது இரு அணியும்.


2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.


வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. 
2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. இதில் மழை காரணத்தால் வங்காளதேசத்துக்கு ஒரு புள்ளி கிடைத்தது.


தலா ஒரு புள்ளியுடன் உள்ள நியூசிலாந்து, வங்காளசேத்துக்கு இது தான் கடைசி லீக் ஆட்டமாகும்.