ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ )  பிரிக்கப்பட்டுள்ளது. 


‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 3-வது லீக்கில் இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் (பி பிரிவு) மோதுகின்றன. 


கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 5-0 என்ற கணக்கில் இலங்கையை பந்தாடியது நினைவிருக்கலாம்.


தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஙஸ், டுமினி, டேவிட் மில்லர், பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, மோர்னே மோர்கல் அல்லது வெய்ன் பார்னல், இம்ரான் தாஹிர்.


இலங்கை: நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா (கேப்டன்), குசல் மென்டிஸ், தினேஷ் சன்டிமால், குணரத்னே, குசல் பெரேரா, கபுகேதரா, திசரா பெரேரா, குலசேகரா, மலிங்கா, பிரசன்னா அல்லது சன்டகன்.