யார் எந்த இடத்தில்? ஐசிசி உலகக் கோப்பை அட்டவணை ஒரு பார்வை
எந்த அணி எந்த இடத்தில உள்ளது. இதுவரை எத்தனை ஆட்டங்களில் ஆடி உள்ளனர். அவர்களின் புள்ளிகள் எவ்வளவு என்று பார்போம்..!!
இங்கிலாந்து: 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது.
இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று 24 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தால், லீக் போட்டியுடன் அந்த அணி வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும். இங்கிலாந்து அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் நிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, எந்த அணி எந்த இடத்தில உள்ளது. இதுவரை எத்தனை ஆட்டங்களில் ஆடி உள்ளனர். அவர்களின் புள்ளிகள் எவ்வளவு என்று பார்போம்..!!